பொது சேவை மையம்
-
பொது சேவை மையம் என்பது டிஜிட்டல் இந்தியா (Digital India) திட்டத்தின் ஒரு முக்கிய கூறாகும்.
-
இவை கிராமங்களுக்கு பல்வேறு மின்னணு சேவைகளை (E-Service) வழங்கும் புள்ளியாக உள்ளது.
-
அரசின் டிஜிட்டல் மற்றும் நிதி சார்ந்த சேவைகளுக்கு உதவுகிறது.
-
நாட்டின் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் B2C (Business to Customer) சேவைகளை வழங்குவதற்கும், அத்தியாவசிய சேவைகள், சமூக நலத்திட்டங்கள், சுகாதாரம், நீதி,கல்வி மற்றும் விவசாய சேவைகளை வழங்குவதற்காக இந்த பொது சேவை மையம் உள்ளது.
[the_ad id=”6240″]
பொது சேவை மையத்தின் மூன்று பகுதிகள்
-
ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான டிஜிட்டல் உட்கட்டமைப்பை ஏற்படுத்துதல்.
-
தேவைக்கேற்ற ஆளுகை மற்றும் சேவைகள் வழங்குதல்.
-
குடிமக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் வழங்குதல்.
முக்கியத்துவம்:
கிராமப்புற பகுதிகளில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதிலும் கிராமப்புற திறன் மேம்பாடு, வாழ்வாதார மேம்பாடு போன்றவற்றின் மீதும் முக்கிய கவனம் செலுத்துகிறது.
அடிப்படை:
ஈ- ஆளுமையை இந்திய அளவில் அமல்படுத்துவதற்கான குறைந்தபட்ச தேசிய பொதுத் திட்டத்தின் ஒரு அங்கமாக 2006-ஆம் ஆண்டு பொது சேவை மையங்கள் (Common Service Center) அங்கீகரிக்கப்பட்டது.
[the_ad id=”5689″]