உஜ்வாலா யோஜனா என்றால் என்ன?/What is Pradhan Mantri UJJWALA Yojana?

 

 

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.[the_ad id=”5123″]

BODY

1.இத்திட்டத்தின்படி, ஐந்து கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக 8000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகளுக்கு ரூபாய் 1600 வழங்கும். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளோடு கலந்தாலோசித்து வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகள் கண்டறியப்படும். [the_ad id=”2159″]

2.மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகம், கோடிக்கணக்கான ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில், ஒரு நலத்திட்டத்தை செயல்படுத்துவது இதுவே முதன் முறை.

3.இந்தியாவில் 5 லட்சம் மரணங்கள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மரணங்களில் பெரும்பாலானவை, இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் மற்றும் புற்றுநோய் காரணமாக ஏற்படுபவை. வீட்டினுள் ஏற்படும் காற்று மாசு காரணமாகவும் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன. ஏராளமான குழந்தைகள் சுவாச நோயில் பாதிக்கப்படுகின்றனர். சமையலறையில் வெளிப்படும் புகை, ஒரு மணி நேரத்துக்கு 400 சிகரெட் புகைப்பதற்கு சமமாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.[the_ad id=”5123″]

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது, நாடெங்கும் இணைப்பு வழங்க உதவும். இத்திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் உடல் நலனை பாதுகாக்கும். அவர்களின் வேலைப்பளுவை குறைத்து, சமையல் நேரத்தையும் குறைக்கும். சமையல் எரிவாயு வழங்குவதன் மூலம், ஊரக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

[the_ad id=”2159″]

CONCLUSION

 

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.