அரசின் திருநங்கை நலத்திட்டங்கள் சிலவற்றை குறிப்பிடுக. / LIST OUT THE WELFARE MEASURES TAKEN BY THE GOVERNMENT FOR TRANSGENDER.

REFERENCE

TAMIL[the_ad id=”5123″]

ENGLISH[the_ad id=”2159″]

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

ஆண், பெண் இருபாலரைத் தவிர மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி, கோத்தி உள்ளிட்டோரை மாற்றுப்பாலினத்தோர் என அரசு வகைப்படுத்தியுள்ளது. இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு திருநங்கை நல வாரியம் செயல்பட்டு வருகிறது.[the_ad id=”2159″]

BODY

1.இந்த வாரியமானது கடந்த 2012 முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களை இனம் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மேலும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு என அடையாள அட்டைகளையும் வழங்கி வருகிறது.[the_ad id=”5123″]

2.வழங்கப்படும் உதவிகள் 

 

திருநங்கைகள் சுயதொழில் துவங்க ரூ.20 ஆயிரம் வரை கடனுதவி,
தையல் இயந்திரங்கள் வழங்குதல்,
சிகிச்சை மற்றும் பாலின அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் திருநங்கைகள் தங்குவதற்கென தற்காலிக விடுதி,
அடையாள அட்டை
இலவச பட்டா வழங்குதல்,
வீடு வழங்கும் திட்டம்,
சுய உதவிக்குழுக்கள் உருவாக்குதல்,
ரேஷன் கார்டு வழங்குதல் .[the_ad id=”2159″]

3.40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

4. திருநங்கைகள் சுய உதவிக்குழு — பெட்டிக்கடை, மளிகைக்கடை, உணவகம், துணி வியாபாரம், பால் வியாபாரம், வேளாண் பொருள்கள் விற்பனை, அழகு நிலையம், சோப்பு வியாபாரம், செங்கல் சூளை அமைத்தல் உள்ளிட்ட சுய தொழில்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன.[the_ad id=”5123″]

CONCLUSION

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.