அத்தியாவசிய பொருட்கள் சட்டம் (ECA) என்றால் என்ன?

Essential commodity Act-1995

1955 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.

வழங்கள் மற்றும் விநியோகத்தை (supply and distribution) ஒழுங்குபடுத்தி நுகர்வோருக்கு நியாயமான விலை கிடைக்க உற்பத்தி பொருட்கள் ‘அத்தியாவசியம்’ என வரையறுக்கப்பட்டது.

இதன்கீழ் உணவுப்பொருட்கள், மருந்து, உரம், பெட்ரோலியம் பொருட்கள் அடங்கும்.

அதிகபட்ச சில்லறை விலையை (maximum retail price) அரசாங்கம் நிர்ணயம் செய்யும்.

சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்கள் மீதான கட்டுப்பாடுகள் சந்தையில் பதுங்களை தடுப்பதற்கும், விநியோகத்தை மேம்படுத்தவும் இது கட்டமைக்கப்பட்டாலும் மொத்த மற்றும் சில்லரை விலையில் ஒரு இடைவெளி இருப்பதை இது காட்டுகிறது.

சட்டத்தின் முக்கியத்துவம்:

இது நேர்மையற்ற வணிகத்திற்கு எதிராக நுகர்வோரை பாதுகாக்கிறது.

பதுக்கல்காரர்கள் மற்றும் கருப்பு சந்தையை ஒழிக்கிறது.

[the_ad id=”6240″]

 

இந்திய கலப்பு பொருளாதார பின்னணியில் இந்த முறையானது வணிகர்கள் நுகர்வோரை சுரண்டுவதை இச்சட்டம் தடுக்கிறது.

புதிய திருத்தம்:

தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு போன்றவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நன்மைகள்:

தனியார் முதலீட்டாளர்களுக்கு வணிக நடவடிக்கைகளில் அரசின் தலையீடு அச்சமானது குறைக்கப்படும்.

தனியார் அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும். உணவு வழங்கல் சங்கிலியை (food supply chain ) நவீனமாக இச்சட்டம் உதவும்.