சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களின் கேள்விகளும், ஐ.ஏ.எஸ் இளம் பகவத்தின் A – Z பதில்களும்! #VikatanExclusive #FAQ
நன்றி : விகடன்
“ஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்?”
-
“ஐ.ஏ.எஸ் ஆக, பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதுமானது.
-
அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும் என்பதை யூ.பி.எஸ்.சி பாடத்திட்டம் வகுத்துத்தருகிறது. அதைப் பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்க வேண்டும்.
முதல்நிலைத் தேர்வு (Priliminary Exam)
-
இது இரண்டு தாள்களைக்கொண்டிருக்கும். இந்தத் தாள்கள், சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும்வகையில் இருக்கும்.
-
முதல் தாள் General Studies. இது பொது அறிவைச் சோதிக்கக்கூடியது.
-
இரண்டாம் தாள், திறனறிவைக் கூர்தீட்டக்கூடியது.
-
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த நிலை தேர்வான முதன்மைத் தேர்வுக்குச் (Main Exam) செல்ல முடியும்.
-
முதல்நிலை தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெறுகிறீர்கள் என்பதை உங்களுடைய ரேங்கிங் பட்டியலில் கணக்கிடுகிறார்கள். திறனறிவு தேர்வில் 33 சதவிகிதம் மதிப்பெண் பெற்றாலே தகுதி பெற்றுவிடலாம்.
[the_ad_placement id=”infeed-ads-2″]
முதன்மைத் தேர்வு (Main Exam)
-
முதன்மைத் தேர்வில் நான்கு பொது அறிவு தாள்களும், ஒரு விருப்பப் பாடம் (Optional Subject) சார்ந்த இரண்டு தாள்களும் இருக்கின்றன.
-
ஒரு கட்டுரை வடிவில் (Essay) தாள் ஒன்றும், ஆங்கில மொழி தாள் ஒன்றும், இந்திய மொழிகளில் ஒரு தாளும் இருக்கின்றன.
-
ஆகமொத்தம், ஒன்பது தாள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண். இதில் ஆங்கிலமொழி தாளுக்கான மதிப்பெண்ணும், இந்தியமொழி தேர்வுக்கான மதிப்பெண்ணும் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படாது.
-
இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படும் மதிப்பெண் அடிப்படையில், பெர்சனாலிட்டி தேர்வுக்கு (Personality Interview) அழைக்கப்படுவார்கள்.
Personality Interview
-
இதில் 275 மதிப்பெண். இதில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என்பதையெல்லாம் கூட்டி அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்களின் ரேங்க் பட்டியலில் வெளியிடப்படும்.
-
இவ்வாறு பட்டியல் வெளியிடப்படும்போது தேர்வு எழுதுபவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதிநிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.
[the_ad_placement id=”infeed-ads-2″]
IAS TRAINING
-
அதன்பிறகு பயிற்சி வழங்கப்படும். தகுதிநிலை அடிப்படையில் மாநில ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இதை எல்லாம் யூ.பி.எஸ்.சி இணையதளத்தில் குறிப்பிட்டிருப்பார்கள்.
மேலும் தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்