சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களின் கேள்விகளும், ஐ.ஏ.எஸ் இளம் பகவத்தின் A – Z பதில்களும்! #VikatanExclusive #FAQ
நன்றி : விகடன்
கலை பாடங்களான வரலாறு, புவியியல், சமூகவியல், மானுடவியல் போன்ற பாடங்களையும், அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றையும் இன்ஜினீயரிங் பாடங்களான சிவில் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் என இன்ஜினீயரிங் பாடங்களையும், தமிழ் இலக்கியம் என ஏகப்பட்ட பாடங்கள் இருக்கின்றன.
இதில் ஏதேனும் ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இது உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்துதான். எந்த விருப்பப் பாடத்தை ஆர்வத்துடன் எடுத்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் எனப் பாருங்கள்.
விருப்பப் பாடங்கள் மேற்கொள்ளும்போது நான்கு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
ஒன்று, குறிப்பிட்ட பாடத்தில் விருப்பம் இருக்க வேண்டும்.
இரண்டாவது, விருப்பப் பாடம் குறித்த வழிகாட்டுவதற்கு வாய்ப்புகள்.
குறிப்பாக, தமிழ் இலக்கியம் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது தமிழ் இலக்கியம் சார்ந்த வழிகாட்டிகள் இருக்க வேண்டும்.
மூன்றாவது, விருப்பப் பாடத்துக்கான புத்தகங்களும், இதர நூல்களும் நீங்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும்.
நான்காவது, சில விருப்பப் பாடங்கள் பல வெற்றியாளர்களை உருவாக்கியிருக்கும். அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எந்த விருப்ப பாடங்களை தேர்வு செய்ய விரும்புகிறீர்களோ அந்த குறிப்பிட்ட பாட த்தில் விருப்பம் இருக்கிறதா என்பதனை 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள புத்தகங்களை படித்தாலே உங்களுக்கு தெரிந்துவிடும்.