ஒரு வழியாக Group – 4 தேர்வு முடிவடைந்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட OMR ஐ திருத்தி இரண்டு மாதத்திற்குள் முடிவுகள் வெளியிடப்பட்டது டிஎன்பிஎஸ்சி -யில் இதுவரை நடைபெறாத ஒன்று.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெறாதவர்களும் அடுத்த முறை சிறப்பாக தேர்வை செய்வதற்கு வாழ்த்துக்கள் .
[the_ad id=”2159″]
இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன?
ஒரு விஷயத்தை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏனோ தானோ என்று தேர்வு எழுதுபவர்களுக்கான களம் இதுவல்ல.
பல ஆண்டு உழைப்போடு இதனை தவம் போல் கடுமையாக படிப்பவர்கள் பல ஆயிரம் பேர்.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நூலகத்திலும் இதற்கென தனியே ஒரு குழுவாகவே படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
[the_ad id=”6240″]
எனவே சரியாகப் படிக்காதவர்கள் இதன் முடிவை பற்றி எதிர்பார்த்துக் கொண்டிருப்பது வீண் வேலை.நிச்சயமாக கட்-ஆஃப் என்பது 170+ அளவில் தான் வரும்.
[the_ad id=”5123″]
அடுத்தது என்ன செய்வது ?
இந்த குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அடுத்தது செய்யவேண்டியது முக்கியமான ஒரு விஷயம்.அது அடுத்து வர இருக்கும் Group – 2 தேர்வுக்கு தயார் செய்வது தான்.
[the_ad id=”6240″]
குரூப் 2 இன்டர்வியூ முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட உடன் அடுத்த அறிவிப்பு டிசம்பர் மாதத்திலேயே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
[the_ad id=”6240″]
யாரெல்லாம் குரூப் 2 தேர்வுக்கு தயார் செய்வார்கள்?
குரூப்-4 தேர்வில் வெற்றிபெற இருப்பவர்கள் அடுத்தது உள்ள குரூப் 2 தேர்வுக்கு தயார் செய்வது இயல்பு.
குரூப்-4 தேர்வை சரியாக செய்ய முடியாதவர்கள் அதைவிட நிச்சயமாக குரூப்-2 தேர்வுக்கு தயாராக வேண்டிய கட்டாயம் உள்ளது.
[the_ad id=”6240″]
சரியான திட்டமிடலும் பயிற்சியுடனும் முயற்சி செய்தால் மட்டுமே அடுத்துவர இருக்கும் Group 2 தேர்வில் வெற்றி பெற முடியும். அதற்கு முக்கியமான காரணம் குரூப்-2 தேர்வை ஏற்கனவே குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களும் எழுதுவார்கள்.
[the_ad id=”6240″]
அதுமட்டுமில்லாமல் குரூப்-4 தேர்வு தேர்வில் வெற்றி அடையாதவர்கள் முழு முயற்சியுடன் இதில் பங்கேற்பார்கள். மேலும் குரூப் 1 & யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்களும் குரூப்-2 தேர்வு விரும்புவார்கள்.
[the_ad id=”6240″]
Group – 2 தேர்வு எவ்வாறு இருக்கும்?
அரசு தேர்வில் வெற்றி பெறுவது மிக எளிது ஒரே மாதத்தில் நாங்கள் வெற்றி பெற வைத்து விடுவோம் என்ற விளம்பரங்களை பார்த்து ஏமாந்து விட வேண்டாம். கடினமாகவும் திட்டமிட்டு படித்தால் மட்டுமே இந்த தேர்வில் வெற்றிபெற முடியும் .
[the_ad id=”6240″]
குரூப்-4 தேர்வில் சிறந்த தரத்தில் வெற்றி பெற்றவர்கள் கூட சில சமயம் இந்த தேர்வில் வெற்றி பெறுவது முடிவதில்லை. அதே போன்று குரூப்-1 முதன்மைத் தேர்வில் எளிதாக வெற்றி பெற்றவர்கள் கூட இந்த தேர்வில் சில சமயம் வெற்றி பெறுவதில்லை.
[the_ad id=”6240″]
அதற்கு காரணம் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள மொழி மாற்றம் பகுதிகளும் திருக்குறள் பகுதிகளுமே ஆகும்.
குரூப் தேர்வானது பட்டப்படிப்பு தரத்திலான தேர்வு . எனவே பொது அறிவு பகுதி குரூப்-4 தேர்வை காட்டிலும் சற்று கடினமாகத்தான் எப்பொழுதுமே இருக்கும்.
[the_ad id=”6240″]
Group 2 தேர்வுக்கு எப்படி தயார் செய்வது?
அடுத்த பதிவில் இதைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் விவாதிப்போம்.