Group 2 எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. குருப் 2 எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வெற்றி பெறப்போகிறவர்கள் பெரும்பாலானோர் group 2 interview முதல் முறையாக எதிர்கொள்ளப் போகிறவர்கள். அவர்களுக்கு வழிகாட்டுவதற்கக்காக இந்தப்பதிவு.
[the_ad id=”6240″]
உங்களுக்கு group 2 interview வைப் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவிடலாம்.
எந்த மாதிரியான நடைமுறை group 2 interview ல் பின்பற்றப்படுகிறது?
[the_ad id=”6240″]
OT Memo மூலம் உங்கள் பதிவெண்னை உள்ளிட்டு உங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு எந்தத் தேதி மற்றும் டேபிள் எண் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
[the_ad id=”2159″]
அஞ்சல் வழியாக அழைப்பாணை அனுப்பப்படுமா?
இல்லை. மின்னஞ்சல் மற்றும் செல்போனுக்கு குறுஞ்செய்தி வடிவில் தான் வந்தடையும்.
Group 2 interview நடைமுறைகள்
நேர்முகத்தேர்விற்கு OT MEMO TNPSC இணையத்தளத்தில் வெளியிடப்படும். உங்களுக்கான தேதி மற்றும் டேபிள் எண் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் ஏற்கனவே இ சேவை மையத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இருந்தாலும் நேர்முகத்தேர்வு அன்று ஒருமுறை உங்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
டோக்கன் முறை
அதன் பின்னர் குழுக்கள் முறையில் ஒரு பெட்டியில் ஏதேனும் ஒரு டோக்கன் எடுக்க சொல்வார்கள். அந்த டோக்கனில் என்ன எண் விழுகிறதோ அந்த எண்ணுக்குரிய நேர்முகத்தேர்வு குழு உங்களுக்கு நேர்முகத்தேர்வை நடத்தும்.
உங்கள் நேர்முகத்தேர்வு முடிந்த பின்னர் நீங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவீர்.
அனைத்து மாணவர்களுக்கும் நேர்முகத்தேர்வு முடிந்த பின்னர் அதிகபட்சம் 5 நாட்களுக்குள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்விற்கான மதிப்பெண் வெளியிடப்படும். (மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் நேர்முகத்தேர்வு முடிந்த அன்று இரவுக்குள் மொத்த மதிப்பெண்கள் வெளியிடப்படும் )
[the_ad id=”6240″]
இது கடைசி முடிவு அல்ல. இதன் பின்னர் சில வாரங்கள் கழித்து தரவரிசை வெளியிடப்படும். அதில் உங்கள் தரத்தை பொருத்து இடஒதுக்கீட்டை பொறுத்து உங்களுக்கு கலந்தாய்வு தேதி அறிவிக்க படும். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டால் உங்களுக்கு எந்த துறை காலியாக உள்ளதோ அதனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
நேர்முகத் தேர்விற்கு முன்னர் மாதிரித் தேர்வு எங்கேனும் நடைபெறுமா?
பெரும்பாலான முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மாதிரி நேர்முகத் தேர்வை நடத்துகின்றனர்.upsctamil.com தளத்தில் அதைப்பற்றிய தகவல்கள் UPDATE செய்யப்படும்.
மாதிரி நேர்முகத் தேர்விற்கு கட்டணம் எவ்வளவு இருக்கும்?
இதுவரை எந்த பயிர்சி நிறுவனமும் மாதிரி நேர்முகத் தேர்விற்கு கட்டணம் வசூலித்தது இல்லை.
[the_ad id=”6240″]
எந்தெந்தப் பயிற்சி மையம் மாதிரி நேர்முகத் தேர்வை வழங்குகின்றனர்? அதைப் பற்றிய தகவல் பதிவிடவும்.
- சங்கர் IAS அகாடமி
- மனித நேயம் IAS அகாடமி
- அப்பல்லோ பயிற்சி மையம்
- FOCUS IAS ACADEMY
OTHER ACADEMY INFORMATION WILL BE UPDATED ONCE RESULT PUBLISHED.
மேலும் மாவட்ட அளவில் மாதிரி நேர்முகத் தேர்வை நடத்தும் பயிற்சி நிறுவனர்கள் இலவச பயிற்சி தர விரும்பினால் கீழே உள்ள COMMENT பாக்ஸில் தெரிவித்தால் அதைப்பற்றிய தகவல்கள் upsctamil.com தளத்தில் UPDATE செய்யப்படும்.
[the_ad id=”6240″]
அடிப்படையாக நேர்முகத் தேர்வில் என்னத் தகவல்கள் கேட்கப்படும்?
- உங்களைப் பற்றிய சுயவிவரம்.
- உங்கள் மாவட்டத்தைப் பற்றி (சிறப்புத்தகவல்கள் ) .
- படித்த டிகிரி தொடர்பானவை.
- எதனால் இந்த வேலையை தேர்ந்தெடுக்கிறீர்கள்.
- நடப்பு நிகழ்வுகள் ( சில சமயம் அது தொடர்பான உங்கள் கருத்துன என்பது) போன்றவை பொதுவானவை. இதைத்தாண்டி உங்கள் பதிலைப் பொருத்து கிளைக் கேள்விகள் கேட்கப்படும்.
- மேலும் விவரங்கள் தேர்வு முடிவு வெளியானவுடன் upsctamil.com தளத்தில் UPDATE செய்யப்படும்.
உடனடி தகல்வல்களுக்கு குரூப் 2 நேர்முகத்தேர்வு TELEGRAM குழுவை தொடர்பு கொள்ளவும்.
TELEGRAM குழு LINK .
நேர்முகத்தேர்வு தொடர்பாக உங்கள் கேள்விகளை கீழே பதிவிட்டால் பதில் Update செய்யப்படும்.
இந்தத் தகவல் பயனுள்ளதாக உள்ளது என நீங்கள் கருதினால் இந்தப் பக்கத்தை உங்கள் நண்பர்ளுக்கும், மற்ற குழுவிலும் பகிரவும்.