EXPLAIN THE TERM CLIMATE CHANGE AND NOTE DOWN ITS IMPACT AND MEASURES TAKEN BY GOVERNMENTS. / காலநிலை மாற்றம் – விளக்குக.மேலும் அதன் விளைவுகளையும் அதற்கான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை குறிப்பிடுக.

காலநிலை மாற்றம்
  • வெப்ப வாயு வெளியேற்றத்தின் காரணமாக புவியின் காற்று மண்டலம் வெப்பமடைந்து வருவதை புவி வெப்பமயமாதல் என்று அழைக்கிறோம்.
  • இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்படுவதை காலநிலை மாற்றம் என அழைக்கிறோம்.
  • கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்ஸைடு, குளோரோ, ஃப்ளோரோ கார்பன் உள்ளிட்ட ஆறு பசுமைக்குடில் வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் ஆகும்.
  • புவியில் வெப்ப வாயுக்களின் அளவானது கடந்த பல ஆண்டுகளாகவே காற்றுவெளி மண்டலத்தில் படிப்படியாக அதிகரித்து வந்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
  • அதிலும் குறிப்பாக கடந்த 150 ஆண்டுகளில் இந்த புவி வெப்ப வாயுக்களின் வெளியீடு அளவுக்கு அதிகமாக காற்று வெளி மண்டலத்தில் கலக்க விடப்பட்டதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
  • காரணம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் துவங்கி, இருபதாம் நூற்றாண்டில் வேகம்பிடித்த மேற்குலக நாடுகளின் தொழிற் புரட்சி இதற்கான முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
  • அதாவது இந்த தொழிற்புரட்சியின் முக்கிய உந்துசக்தியாக இருந்தவை, நிலக்கரி, பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய புதைபடிவ எரிபொருட்கள். இந்த புதை படிவ எரிபொருட்கள் எரிக்கப்படும்போது வெளி யாகும் கரியமில வாயு தான் புவிவெப்பமடைவதன் முக்கிய குற்றவாளியாக காட்டப்படுகிறது.

 

விளைவுகள்
  • உலகம் முழுவதும் உயர்ந்த மலைப்பிரதேசங்களில் பனி சூழ்ந்து காணப்படுவதோடு, பூமியின் வட துருவம் மற்றும் தென்துருவத்தில் நீர் பனிக் கட்டியாக உறைந்து காணப்படுகிறது.
  • புவி வெப்ப மயமாதல் காரணமாக இந்த பனி உருகி, கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
  • புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பொழிவு குறையக்கூடும் என்றும், மலைப்பிரதேசங்களில் கோடைகாலத்தில் மிக விரைவாக பனி உருகிவிடும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
  • இதனால், மலைப்பிரதேசங்களில் தண்ணிர் பிரச்சனை உருவாகும். இரவு நேரங்களிலும் வெப்பம் நிலவுவதோடு, குளிர்காலத்தில் கூட வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும்.
  • அதிக ஈரப்பதம் காரணமாக மழை அளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. புவி வெப்பம் காரணமாக அடிக்கடி சூறாவளி ஏற்படக்கூடும்.
  • நிலத்தில் உள்ள நீர் அதிகமாக ஆவியாகி, நிலம் வறண்டு காணப்படும். ஏற்கனவே, வறண்ட பிரதேசமாக உள்ள பகுதிகள் மேலும் வறண்ட நிலைக்குச்செல்லும். புவி வெப்பமயமாதல் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, சூறாவளி மிக வேகமாக வீசுவதோடு, காற்றின் வேகமும் மிகவும் அதிகரிக்கும். காற்றின் போக்கில்கூட மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
காடுகளில் ஏற்படும் பாதிப்பு
  • புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கரியமில வாயுக்களை காடுகளில் உள்ள மரங்களும், செடிகளும் கிரகித்துக்கொள்வதால், பருவநிலை மாற்றத்தை தடுக்கவும் காடுகள் உதவுகின்றன.
  • ஆனால், விவசாயம் மேற்கொள்வதற்கும், மரப்பொருட்களுக்காகவும் வனங்கள் பெருமளவு அழிக்கப்படுவதால், இதன் மூலம் ஏராளமான அளவு கரியமில வாயு மற்றும் பிற வாயுக்கள் வளிமண்டலத்தில் கலந்து புவி வெப்பமயமாதலை ஊக்குவிக்கின்றன.
  • உலகளவில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவில் 20 சதவிகிதம் காடுகளை அழிப்பதன் மூலம் ஏற்படுகிறது
வேளாண்மை மற்றும் நீர்வளத்தில் பாதிப்பு
  • விவசாயம் பெரும்பாலும் அதிகம் மழை பெய்யும் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன.
  • பருவநிலை மாற்றத்தினால் மழை பெய்வதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அது விவசாயத்தை பாதித்துவிடும். புவி வெப்பமயமாதல் காரணமாக தண்ணிர் தட்டுப்பாடு ஏற்பட்டு, சமூக பிரச்சனைகள் உருவாகும். உலகில் சுமார் 70 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர்.
  • உலக நாடுகள் மேற்கொள்ளும் ஏற்றுமதியில் சுமார் 40 சதவிகித பொருட்கள் வேளாண் பொருட்கள்.
  • உணவு தானிய உற்பத்தி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு மூலம், பெரும்பாலான வீடுகளில் வருமானம் ஈட்டப்படுகிறது.
  • புவி வெப்பமயமாதல் காரணமாக பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டால், விவசாயத்தை நம்பியிருக்கும் இந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்
  • புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் 1997ஆம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன.
  • 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தம் புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் மேற்கொண்ட முதல் முக்கியமான நடவடிக்கையாகும்.
  • 2015ம் ஆண்டு பாரிஸ் மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதும் பருவநிலை மாற்றத்தின் இன்னல்களை குறைக்க வழிவகை செய்யும்.

 

Climate change
  • Climate change occurs when changes in Earth’s climate system result in new weather patterns that last for at least a few decades, and maybe for millions of years.
  • Human activities can also change the earth’s climate and are presently driving climate change through global warming.
  • Global warming refers to the observed and continuing increase in average air and ocean temperatures since 1900 caused mainly by emissions of greenhouse gasses in the modern industrial economy.
  • The largest human influence has been the emission of greenhouse gases such as carbon dioxide, methane, and nitrous oxide.

 

EFFECTS:
  • Future climate change effects are expected to include rising sea levels, ocean acidification, regional changes in precipitation, and expansion of deserts in the subtropics.
  • Surface temperature increases are greatest in the Arctic, with the continuing retreat of glaciers, permafrost, and sea ice.
  • Predicted regional precipitation effects include more frequent extreme weather events such as heatwaves, droughts, wildfires, heavy rainfall with floods, and heavy snowfall.
  • Effects directly significant to humans are predicted to include the threat to food security from decreasing crop yields, and the abandonment of populated areas due to rising sea levels.
Governmental and intergovernmental action
  • Kyoto Protocol
  • The Kyoto Protocol is an amendment to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC).
  • Countries that have ratified this protocol have committed to reduce their emissions of carbon dioxide and five other greenhouse gases, or engage in emissions trading if they maintain or increase emissions of these gases.
  • The World Bank’s Prototype Carbon Fund is a public private partnership that operates within the Clean Development Mechanism (CDM)
  • National Action Plan on Climate Change — India