தேர்தல் ஆணையம்
-
தேசிய அளவில் தேர்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு.
-
இது தவிர மாநில அளவிலான தேர்தல்களை நடத்த மாநிலந்தோறும் இதன் கீழ் மாநில தேர்தல் ஆணையங்கள் செயல்படுகின்றன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
-
20ம் நூற்றாண்டின் இறுதிவரை வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி தேர்தல்கள் நடத்தப்பட்டன.
-
தற்போது பெரும்பாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன
தேர்தல் செலவு வரம்பு
-
மாநிலத்தின் அளவு, தொகுதியின் அளவு, வாக்காளர்களின் எண்ணிக்கை என்று எதையுமே கணக்கில் கொள்ளாமல் மக்களவை தொகுதிக்கு ரூ.40 இலட்சமும், சட்டப் பேரவைத் தொகுதிக்கு ரூ.16 இலட்சமும் ஒரு வேட்பாளர் செலவு செய்யலாம் என்று மத்தியத் தேர்தல் ஆணையம் வரம்பு விதித்துள்ளது.
-
உலகநாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, இந்தியாவே முதன் முதலாக முழுவதும் மின்னணு எந்திரத்தின் மூலம் பொதுத்தேர்தலை நடத்திக்காட்டியது.
நேர்மையான தேர்தல் ஆணையம்
-
இவ்வாணையத்தின் மீது மக்கள் பார்வை விழக் காரணமாயிருந்தவர் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி. என். சேஷன்.
-
அவர் 1990 முதல் 1996ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். அவரின் பணிக் காலத்தில் தான் அதுவரை தேர்தல்களில் ஊழல் மிகுந்திருந்த நிலை அவரின் கண்டிப்புமிக்க, நேர்மையான செயலால் சற்றுத் தணிக்கப்பட்டது.
-
தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதுடன் தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றி நடக்கின்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்புள்ள சவாலான பணியாகும்.
-
தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு அரசியல் கட்சிகள் ஆளாகியிருப்பதுடன், விதி மீறல்கள் நடந்தால் அதற்குரிய தண்டனையை எதிர்கொள்ளவும் நேரிடுகிறது.
-
எனவே, தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதும் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றன.
நடத்தை விதிமுறைகள்:
-
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது.
-
அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது.
-
பதவி உயர்வும் அளிக்கக் கூடாது. வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.
-
அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
-
அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.
-
2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளிடையே விரிவான பொதுக்கருத்து காணப்பட்டது.
விவிபிஎடி முறை
-
2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியிடப்பட்ட இந்திய அரசின் அறிவிக்கையின்படி 1961-ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
-
இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் “விவிபிஎடி” முறையை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி கிடைத்தது.