Explain the Features of Sarva Shiksha Abhiyan. / சர்வ சிக்ஷா அபியான்(அனைவருக்கும் கல்வி இயக்கம்) திட்டத்தின் அம்சங்கள் பற்றி எழுதுக.

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

ஆறு முதல் பதினான்கு வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் தொடக்க கல்வியை வழங்குவதே சர்வ சிக்ஷா அபியான்(அனைவருக்கும் கல்வி இயக்கம்) திட்டத்தின் நோக்கமாகும்.[the_ad id=”5123″]

BODY

1.1998ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் மாநிலக் கல்வி அமைச்சர்கள் வழங்கி பரிந்துரைகளை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு சர்வ சிக்ஷா அபியான் (SSA) தொடங்கப்பட்டது.

2.2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பில் 86வது சட்ட திருத்தத்தில் தொடக்கக் கல்வி என்பது அடிப்படை உரிமையாக அமைந்தது.

[the_ad id=”5123″]

3.SSA-வின் இன்றியமையாத அம்சங்கள்

அனைவருக்கும் தொடக்கக் கல்வியின் குறிக்கோள் மற்றும் நோக்கங்களை அடைய சரியான நேரத்தில் அமைக்கப் பட்ட ஒரு திட்டமாகும்.

நாடு முழுவதும் தரமான அடிப்படைக் கல்வி தேவை என்ற அடிப்படையின் வெளிப்பாடாக அமைந்ததே இத்திட்டம்.
அடிப்படை கல்வி மூலம் சமூக நீதி மேம்படுத்துவதற்கான வாய்ப்பே இத்திட்டமாகும்.

பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், பள்ளி நிர்வாகக்குழு, கிராமக் கல்வி குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் இணைந்து அனைத்து குழந்தைகளும் கல்வி பயில முனைப்போடு செயல்பட வேண்டும்.

அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்பது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அரசியல் வெளிப்பாடாகும்.

தொடக்கக் கல்வி நிர்வாகத்தில் தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பிற அடித்தள கட்டமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன.

மைய, மாநிலங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக் கிடையேயான ஒரு கூட்டாண்மையை இது வரவேற்கிறது.
அந்தந்த மாநிலங்கள் தங்கள் தொலைநோக்கு பார்வையில் தொடக்க நிலைக் கல்வியை உயர்த்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

இது தனியார் மற்றும் பொது கூட்டமைப்பின் செயல் பாட்டு உத்திக்கான ஒரு வாய்ப்பாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக SSA திட்டம் என்பது சமுதாயத்திற்கு ஏற்ப குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தவும் அதனை படிப்படியாக தரமான கல்வி மூலம் உறுதி செய்வதுமாகும்.

[the_ad id=”5123″]

ANSWER MODEL

INTRODUCTION 

Sarva Shiksha Abhiyan (English: Education for All Movement), is an Indian Government programme aimed at the universalisation of elementary education. the 86th Amendment to the Constitution of India making free and compulsory education to adults between the ages of 6 to 14(estimated to be 205 million children in 2001) a fundamental right.

 

BODY[the_ad id=”2159″]

1.The programme was pioneered by former Indian Prime Minister Atal Bihari Vajpayee.In 2011-12, the Government of India allocated 21,000 crore for this project.

2.Padhe Bharat Badhe Bharat is a nationwide sub-programme of Sarva Shiksha Abhiyan. Children who fail to read in early education lag behind in other subjects.The programme is designed to improve comprehensive early reading,writing and early mathematics programme for children in Classes I and II.

3.SSA has been operational since 2000-2001 to provide for a variety of interventions for universal access and retention, bridging of gender and social category gaps in elementary education and improving the quality of learning.

SSA interventions include inter alia, opening of new schools and alternate schooling facilities, construction of schools and additional classrooms, toilets and drinking water, provisioning for teachers, regular teacher in service training and academic resource support, free textbooks& uniforms and support for improving learning achievement levels / outcome. With the passage of the RTE Act, changes have been incorporated into the SSA approach, strategies and norms.

The changes encompass the vision and approach to elementary education, guided by the following principles : Holistic view of education, as interpreted in the National Curriculum Framework 2005, with implications for a systemic revamp of the entire content and process of education with significant implications for curriculum, teacher education, educational planning and management..

[the_ad id=”5123″]

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.