EXPLAIN ABOUT EL-NINO AND LA-NINO. / எல்நினோ மற்றும் லா நினா பற்றி விளக்குக.

 

[the_ad id=”6240″]

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

 

எல்நினோ

[the_ad id=”5123″]

எல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறு பையன் என்னும் பொருள் கொண்டது டிசம்பர் மாதத்தில் அதாவது கிறிஸ்மஸ் -கிற்கு அருகில் வருவதால் இப்பெயரை கொண்டுள்ளது.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ (El Nino) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இடம் பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றதாழ்வு ஆகும்.
பெரு, எக்குவடோர் மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளின் கடற்கரையருகில் வழக்கத்திற்கு மாறான வெப்பத்தை தோற்றுவிக்கிறது.
எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும். இது ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தோன்றும்.
ஆனால் தற்பொழுது இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த வந்த ஆண்டுகளில் அதிகமாக காணப்படுகிறது. முக்கியமாக 1982 மற்றம் 1983 காலத்தில் மற்றும் ஒரு முறை இதன் தாக்கம் தோன்றும்போது உலக முழுவதும் அந்த ஆண்டிற்கு தீவிரம் இருந்துகொண்டேயிருக்கிறது.
ஆனால் தற்பொழுது ஒவ்வொரு 3 முதல் 7 ஆண்டுவரைக்கும் இதன் தாக்கம் தோன்றுகிறது. அதாவது 1972 1976, 1982 1983, 1987, 1991. 1994, 1997 ஆகும்.

[the_ad id=”6242″]

கிழக்கும் மற்றும் மேற்கத்திய பசிபிக் பெருங்கடலின் சாதாரண காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தை பொருத்து எல் நினோவின் தாக்கமானது கண்டுபிடிக்கப்படுகிறது.
இந்த தாக்கத்தின் போது காற்றின் கிழக்கு மேற்கு என்ற திசை மாறி அதற்கு நேர் மாறான மேற்கு கிழக்கு திசைக்கு இடம்பெயருவதால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக்கின் காலநிலை முற்றிலும் மாறுகிறது.
மேற்க்கத்திய பசிபிக் வழக்கமாக ஈரப்பதத்தையும் மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும், ஆனால் இந்த தாக்கத்திற்கு பிறகு ஈரப்பதம் இல்லாமலும் குறைந்த மழையையும் கொண்ட வறண்ட நிலையை தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா பகுதிகளுக்க தருகிறது.
இதை போலவே கிழக்கத்திய பசிபிக்கானது வழக்கமான வறண்ட குளிரான மற்றும் குறைந்த மழையை கொண்டுயிருக்கும்.
இந்த தாக்கத்திற்கு நேர் மாறாக அதாவது ஈரமாக மித வெப்பம் மற்றும் அதிக மழையை உடைய பகுதியாக மாற்றப்படுகிறது.

 

 

 

லா நினா

[the_ad id=”5123″]

எல்நினோவிற்கு எதிர்மறையானது லா நினா ஆகும்.
இது கிழக்கத்திய பசிபிக்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியை கொண்டதாகும்.
இதன் தாக்கத்தின் போது அதாவது பெரு மற்றும் எக்குவடோர் கடற்கரையின் பகுதியில் அதிக வறட்சியும் குளிர்ச்சியாகவும் இருக்கும். மேற்கத்திய பசிபிக் பகுதியில் மிதவெப்பமாகவும் அதிக ஈரப்பதத்தையும் மற்றும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும் இது எல்நினோவிற்கு அடுத்தாக வரும் ஆனால் அனைத்து நேரங்களில் எல்நினோவிற்கு அடுத்ததாக இருக்காது.
லா நினாவின் விளக்கம் “சிறு பெண்” ஆகும். எல் நினோவிற்கு எதிர்மறையாகும்.

El Niño

 

[the_ad id=”2159″]

El Niño is the name given to the occasional development of warm ocean surface waters along the coast of Ecuador and Peru.

When this warming occurs the usual upwelling of cold, nutrient rich deep ocean water is significantly reduced.
El Niño normally occurs around Christmas and usually lasts for a few weeks to a few months.

Sometimes an extremely warm event can develop that lasts for much longer time periods. In the 1990s, strong El Niños developed in 1991 and lasted until 1995, and from fall 1997 to spring 1998.

The formation of an El Niño [Circulation of Water] is linked with Pacific Ocean circulation pattern known as the southern oscillation

 

Effects of El Nino

[the_ad id=”5123″]

The warmer waters had a devastating effect on marine life existing off the coast of Peru and Ecuador.

Fish catches off the coast of South America were lower than in the normal year (Because there is no upwelling).

Severe droughts occur in Australia, Indonesia, India and southern Africa.

Heavy rains in California, Ecuador, and the Gulf of Mexico.

La Nina

[the_ad id=”2159″]

After an El Niño event weather conditions usually return back to normal.

However, in some years the trade winds can become extremely strong and an abnormal accumulation of cold water can occur in the central and eastern Pacific. This event is called a La Niña.

A strong La Niña occurred in 1988 and scientists believe that it may have been responsible for the summer drought over central North America. During this period, the Atlantic Ocean has seen very active hurricane seasons in 1998 and 1999.

Effects of La Nina

[the_ad id=”6240″]

Some of the other weather effects of La Niña include

abnormally heavy monsoons in India and Southeast Asia,

cool and wet winter weather in southeastern Africa, wet weather in eastern Australia,

cold winter in western Canada and northwestern United States,

winter drought in the southern United States.