REFERENCE |
TAMIL |
ENGLISH |
-
தாய்-சேய் நலனை மேம்படுத்த வளர் இளம் பெண்களிடையே சுகாதாரம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம் இதனைச் செயல்படுத்தும் விதமாக, அனைத்து கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் ஆகியோர் நலனுக்காக இலவசமாக மாதவிடாய் பஞ்சுகள் (Sanitary Napkins) வழங்கப்படுகின்றன.
-
கிராமத்தில் வாழும் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு மாதவிடாய் பஞ்சுகள் (Sanitary Napkins) கொண்ட ஒரு பை வீதம், மூன்று பைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.
-
அதாவது ஒவ்வொரு ஆண்டும் 18 பைகள் ஒவ்வொரு வளர் இளம் பெண்ணுக்கும் வழங்கப்படும்.
-
இந்த மாதவிடாய் பஞ்சுகள், அரசு பள்ளிகளில் பயிலும் வளர் இளம் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், மற்ற வளர் இளம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் வழங்கப்படும்.
-
இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார துணை நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட ஏழு பைகள் வழங்கப்படும்.
-
இதுவன்றி சிறைச்சாலைகளிலுள்ள பெண் கைதிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட மூன்று பைகள் வழங்கப்படும்.