ஜிக்கா வைரஸ் ஏடீஸ் கொசுக்களால் ஜிக்கா வைரஸ் பரவுகிறது.
வைரஸ் பாதிப்பு உள்ளவரின் ரத்தத்தை மற்றவருக்கு ஏற்றினாலும் வைரஸ் பரவும். உடலுறவு மூலமும் வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது.
வைரஸ் தாக்கினால் லேசான காய்ச்சல், கை, கால் வலி, கண் சிவப்பாகுதல், அரிப்பு ஆகியவை ஏற்படும்.
BODY
1.எப்படி தடுப்பது — கொசுக்கள் கடிக்காமல் இருந்தால் ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருக்காது. கொசுக்கள் கடிப்பதை தவிரக்க கிரீம்கள், கொசுவர்த்திகள் பயன்படுத்துவதுடன், உடல் பாகங்கள் முழுவதையும் மறைக்கும்படி உடை அணிய வேண்டும். படுக்கையில் கொசு வலை பயன்படுத்த வேண்டும். ஜன்னல்களுக்கு ஸ்கிரீன் போட வேண்டும்.
2.சுத்தம் — சுத்தான நீரை மூடிய பாத்திரங்களில் வைக்கவும். குப்பைகளை வீட்டில் சேர்த்து வைக்க வேண்டாம். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏடீஸ் கொசுக்கள் மக்களை பகல் நேரம் மற்றும் மாலை வேளையில் தான் கடிக்கும்.
3.சிகிச்சை — ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் சாதாரண காய்ச்சல், வலிக்கு பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக ஓய்வு எடுப்பதுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஜிக்கா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.