ஜிஎஸ்டி என்றால் என்ன/WHAT IS GST?

REFERENCE

TAMIL

     ENGLISH

[the_ad id=”5123″]

ஜிஎஸ்டி என்பது புரிந்துகொள்ளத்தக்க, பன்னிலை கொண்ட, இலக்கைப்பொறுத்த ஒரு வரிவிதிப்பு முறை என்று கூறலாம். ஒவ்வொரு மதிப்புகூட்டுதல் செயல்களுக்குப் பின்னர் இந்த வரி விதிக்கப்படுகிறது.

ஒரு உற்பத்தியாளர் ஒரு சட்டையை உற்பத்தி செய்கிறார் என்று கருதுக் கொள்வோம். அதற்காக அவர் நூலிழையை வாங்கவேண்டும். இந்த நூலிழையைக் கொண்டு சட்டை தயாரிக்கப்படுகிறது. இவ்வகையில், அந்த நூலிழை சட்டையாக நெய்யப்பட்டபின் அதன் மதிப்பு அதிகரிக்கிறது. பின்னர், அந்த சட்டையை உற்பத்தியாளர் பண்டகசாலை முகவரிடம் விற்கிறார். அவர் ஒவ்வொரு சட்டையிலும் அடையாளமுத்திரையை ஒட்டுகிறார். இந்த மதிப்புகூட்டலுக்குப் பின்னர், பண்டகசாலை முகவர் அந்த சட்டையை சில்லரை விற்பனையாளரிடம் விற்கிறார். இவ்விற்பனையாளர் ஒவ்வொரு சட்டையையும் தனித்தனியாக பொதிசெய்கிறார். அவர் அந்த சட்டையை சந்தைப்படுத்தி அதன் மதிப்பை மேலும் அதிகரிக்கிறார்.

இலக்கைப்பொறுத்த வரி

[the_ad id=”5123″]

அனைத்து நிலையில் நிகழும் விற்பனைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்படவேண்டும். முன்னதாக, ஒரு பொருள் தயாரிக்கப்படும்போது, மத்திய அரசு உற்பத்தியின் மீது உள்நாட்டு பொருள் வரி வசூலிக்கும். பின்னர், அந்த மாநில அரசின் மதிப்புகூட்டு வரியைச் சேர்த்தபின்னர் பொருள் அடுத்த நிலைக்கு விற்கப்படும். பின்னர், விற்குமிடங்களில் மதிப்புகூட்டு வரியுடன் அந்த பொருள் விற்கப்படும்.

ஏன் சரக்கு மற்றும் சேவை வரி மிக முக்கியமானது?

[the_ad id=”5123″]

தற்போது, நேரடி மற்றும் மறைமுக வரிகள் என்னும் இருவகையான வரி விதிப்புமுறைகள் நடைமுறையில் உள்ளன. நேரடி வரி செலுத்திய பின், அந்த வரிச்சுமையை பிறருடன் பகிர இயலாது. எ.டு: நமது வருமானத்திற்கு உரிய வருமானவரியை நாமே செலுத்த வேண்டும். இந்த வரியை வேறு ஒருவர் நமக்காக செலுத்த இயலாது.

ஒருவர் தான் செலுத்திய மறைமுக வரியை பிறரைச் செலுத்தச்- செய்யலாம். எடுத்துக்காட்டாக, ஒரு கடைகாரர் தான் செலுத்திய மதிப்புகூட்டு வரியை, தமது வாடிக்கையாளரிடம் இருந்து பெறலாம். எனவே, ஒரு வாடிக்கையாளர் பொருளின் விலையுடன் அதற்குண்டான மதிப்பு கூட்டுவரியையும் சேர்த்து கடைக்காரரிடம் செலுத்த வேண்டும். பின்னர், அவர் அந்த வரியை அரசிடம் செலுத்துவார். பொருளின் விலை மற்றும் வரிச்சுமையையும் ஏற்றுக்கொள்வதால், ஒரு பொருளை வாங்க வாடிக்கையாளர் அதிக முதலீடு செய்யவேண்டியுள்ளது.

[the_ad id=”5123″]

ஏன்னெனில் கடைக்காரர் அப்பொருளை மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கும்போதே அதற்க்குண்டான வரியினை செலுத்தியுள்ளார். அவ் வரித்தொகையையும் மற்றும் (அரசுக்கு செலுத்தவேண்டிய) மதிப்புக்கூட்டு வரித்தொகையையும் கடைக்காரர் வாடிக்கையாளரிடம் இருந்து கூடுதல் தொகையாக வசூலிக்கிறார். இதைத்தவிர கடைக்காரருக்கு மாற்றுவழி ஏதுமில்லை.

செயல்பாட்டுக்கு வந்தபின், இந்த பிரச்சினையை ஜிஎஸ்டி சரி செய்யும். உள்ளீட்டு வரிவரவு என்னும் அமைப்பை ஜிஎஸ்டி உள்ளடக்கியுள்ளது. எனவே, விற்பனையாளர்கள் தாங்கள் செலுத்திய வரியினை திரும்பபெறலாம். எனவே, வாடிக்கையாளருக்கு உள்ள கூடுதல் வரிச்சுமை குறைகிறது.

ஜிஎஸ்டி எவ்வாறு செயல்படுகிறது?

[the_ad id=”5123″]

ஒரு தேசிய வரி சீர்திருத்தம் நிச்சயமாக கடுமையான வழிமுறைகள் மற்றும் ஏற்பாடுகள் ஆகியவைகளைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, ஜிஎஸ்டி ஆட்சிக்குழு ஒரு பிழையேற்படுத்தாத செயல்பாட்டின் மூலமாக இந்த புதிய வரி முறையினை செயல்படுத்த உள்ளது. அதற்காக இந்த குழு ஜிஎஸ்டியை மூன்று வகைகளாக பிரித்துள்ளது. அதன் செயல்பாட்டினை எமது வல்லுநர்கள் உங்களுக்கு விளக்குவார்கள்.

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரும்போது, 3 வகையான சரக்கு மற்றும் சேவை வரிகள் இருக்கும்:

மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST): வருவாய் மத்திய அரசால் வசூலிக்கப்படும்

மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST): மாநிலங்களின் இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மாநில அரசுகளால் வசூலிக்கப்படும்

மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST): மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மத்தியஅரசால் வசூலிக்கப்படும்

[the_ad id=”5123″]

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.