கேள்விகளில் இருக்கும் KEY WORDSஐ புரிந்து கொண்டு உங்கள் விடைகளை எழுதுவது எப்படி?

 

Discuss

விவாதிக்க

 

This is an all-encompassing directive which mandates us to write in detail about the key demand of the question. We also have to discuss about the related and important aspects of the question in order to bring out a complete picture of the issue in hand.

இது ஒரு முழுமையான பதிலை எழுத முற்படுவதாகும், இது கேள்வியின் முக்கிய கோரிக்கையைப் பற்றி விரிவாக எழுதுவதாகும். பிரச்சினை பற்றிய ஒரு முழுமையான தகவல்களை (நேர்மறை மற்றும் எதிர்மறை) வெளியில் கொண்டு வர வேண்டும், கேள்விக்குரிய மற்றும் முக்கியமான அம்சங்களைப் பற்றியும் நீங்கள் விவாதிக்க வேண்டும்.

 

Comment

கருத்து தெரிவிக்க

 

Here we have to express our knowledge and understanding of the issue and form an overall opinion thereupon.

இங்கே நாம் நமது அறிவையும், புரிந்துகொள்ளுதலையும் வெளிப்படுத்தி நம் கருத்திற்கு வலு சேர்க்க வேண்டும்

 

Critically comment

 

விமர்சன ரீதியான கருத்து

 

When you are asked to comment, you have to pick main points and give your ‘opinion’ on them based on evidences or arguments stemming from your wide reading. Critically comment is also forming opinion on main points but in the end you have to provide a fair judgment.

நீங்கள் கருத்து தெரிவிக்கும்போது, ​​நீங்கள் உங்கள் முக்கிய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும், உங்கள் பரந்த வாசிப்பில் இருந்து தோன்றிய சான்றுகள் அல்லது வாதங்களை அடிப்படையாகக் கொண்டு உங்கள் கருத்துக்களை வழங்க வேண்டும். விமர்சன ரீதியான கருத்தும் உங்கள் முக்கிய கருத்தை உருவாக்குவதுதான் ஆனால் இறுதியில் நீங்கள் ஒரு நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும்.

Evaluate

மதிப்பிடுங்கள்

 

When you are asked to evaluate, you have to pass a sound judgment about the truth of the given statement in the question or the topic based on evidences. You have to appraise the worth of the statement in question. There is scope for forming a personal opinion here.

நீங்கள் மதிப்பீடு செய்யப்படும்பொழுது, கேள்வியின் அடிப்படையிலோ அல்லது ஆதாரங்களின் அடிப்படையிலான தலைப்பு பற்றிய உண்மையைப் பற்றிய தெளிவான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இங்கே ஒரு தனிப்பட்ட கருத்தும் கூறவேண்டும்


Analyze

 

பகுப்பாய்வு செய்

 

When asked to analyze, you have to examine methodically the structure or nature of the topic by separating it into component parts and present them as a whole in a summary.

பகுப்பாய்வு செய்வதற்கு கேட்கும்போது , கேள்வியை பகுதி பகுதியாக பிரித்து இயல்பைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

 

 

Critically analyze

 

விமர்சன ரீதியாக ஆய்வு செய்யுங்கள்

 

When asked to analyze, you have to examine methodically the structure or nature of the topic by separating it into component parts and present them as a whole in a summary. You need to conclude with a fair judgment, after analyzing the nature of each component part and interrelationship between them.

 

பகுப்பாய்வு செய்வதற்கு கேட்கும்போது , கேள்வியை பகுதி பகுதியாக பிரித்து இயல்பைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.நீங்கள் ஒவ்வொரு நியாயத்தன்மையின் பகுதியையும் அவற்றுக்கு இடையே உள்ள உறவுமுறையையும் பகுத்தாய்வு செய்தபின் நியாயமான தீர்ப்புடன் முடிக்க வேண்டும்.

 

Examine

 

ஆய்வு செய்

 

Here we have to probe deeper into the topic, get into details, and find out the causes or implications if any.

இங்கே நாம் தலைப்பிற்குள் ஆழமாக ஆராய வேண்டும், விவரங்களைப் பெற்று, காரணங்கள் அல்லது தாக்கங்களைக் கண்டறிந்து கூற வேண்டும்.

 

Critically examine

 

விமர்சன ரீதியாக ஆய்வு செய்

 

When you are asked to examine, you have to probe deeper into the topic, get into details, and find out the causes or implications if any. When ‘critically’ is suffixed or prefixed to a directive, all you need to do is look at the good and bad of something and give a fair judgment.

இங்கே நாம் தலைப்பிற்குள் ஆழமாக ஆராய வேண்டும், விவரங்களைப் பெற்று, காரணங்கள் அல்லது தாக்கங்களைக் கண்டறிந்து கூற வேண்டும். ‘விமர்சனரீதியாக’ என கொடுக்கப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாமே நல்லது, கெட்டது, என எடுத்து கூறி நியாயமான தீர்ப்பைக் கொடுக்கவும் .

Describe

 

விவரியுங்கள்

 

Give a detailed account of words.

 விரிவான விளக்கம் கொடுக்கவும்