போட்டித் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருப்பவர்களுக்கான பதிவு.
கொரோனோ வைரஸ் தாக்குதலின் காரணமாக இந்தியா முழுவதும் ஒரு நீண்ட விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது குறைந்தபட்சம் ஏப்ரல் மாத இறுதி வரை நீட்டிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.
[the_ad id=”6240″]
அதே சமயம் யுபிஎஸ்சி தேர்வுகளும் தள்ளிப் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு காலம் குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மின்சார வாரியத்தால் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே நடைபெற்ற பாரஸ்ட் guard தேர்வு முடிவுகளும் காலவரையின்றி தள்ளிவைப்பு பட்டுள்ளது.
போட்டி தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த விடுமுறை நாள் எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்தப் போவதில்லை. எனவே இந்த விடுமுறை என்பது வெறுமனே வீட்டில் கழிப்பதற்காக அல்ல. நமது உடல்நலத்தை பாதுகாத்துக் கொண்டு அதே சமயத்தில் நாம் படித்து முடிக்க வேண்டிய பாடங்களையும் படிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
[the_ad id=”6240″]
எந்த நேரத்தில் படிக்கலாம்?
இந்த விடுமுறை காலத்தில் பெரும்பாலும் வெளியில் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு இருக்காது. எனவே சிறப்பான திட்டமிடுதலின் மூலமாக மற்ற நாட்களில் நீங்கள் படிப்பதை காட்டிலும் அதிக அளவு உங்களால் படிப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். எனவே குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஆறுமணி நேரம் நீங்கள் படிப்பது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ஆறு மணி நேரம் என்பது இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பிரிவிற்கும் மூன்று மணி நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம். முதல் பகுதிக்கான மூன்று மணி நேரத்தை காலை ஆறு மணியிலிருந்து பதினோரு மணி வரையிலான காலத்தில் ஏதேனும் ஒரு மூன்று மணி நேரத்தை தொடர்ச்சியாகவோ அல்லது இரண்டாக பிரித்துக் கொண்டோ நீங்கள் உபயோகப்படுத்தலாம். இரண்டாவது மூன்று மணிநேரத்தை மதியம் நான்கு மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் ஏதேனும் ஒரு மூன்று மணி நேரத்தை தேர்வு செய்து உங்கள் தயாரிப்புகளை தயார் செய்து கொள்ளலாம்.
* இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கால அளவானது நபருக்கு நபர் வேறுபடுவதால் உங்களுக்கு பொருத்தமான நேரத்தையும் பாடங்களையும் நீங்களே முடிவு செய்து கொள்ளவும்.
[the_ad id=”6240″]
எந்தந்த பாடங்களைப் படிக்கலாம்?
நாம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 6 மணி நேரத்தில் குறைந்தபட்சம் இரண்டு பாடங்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அந்த பாடமானது வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல் போன்று ஏதேனும் இரண்டு முக்கியமான படங்களை தேர்வு செய்து கொள்ளவும். நீங்கள் டிஎன்பிஎஸ்சி தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி பாடப் புத்தகங்களை இந்த விடுமுறையில் படித்து முடித்து வைத்தால் நிச்சயமாக இந்த விடுமுறை முடிந்த உடன் எதிர்வரவிருக்கும் அனைத்து தேர்வுகளிலும் உங்களால் சிறப்பாக செயல்படும் முடியும்.
அதேசமயம் யுபிஎஸ்சி தயார் செய்து கொண்டிருக்கும் மாணவர்கள் வரலாற்றுக்கு ஸ்பெக்ட்ரம், polity லட்சுமிகாந்த், பொருளாதாரத்திற்கு சங்கர் கணேஷ், புவியியல் பாடத்திற்கு என்சிஇஆர்டி குறிப்பிடப்பட்டுள்ள 6லிருந்து 12 ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களை தயார் செய்வது வரவிருக்கும் முதல்நிலைத் தேர்வுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
[the_ad id=”6240″]
போட்டித் தேர்வு தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்கள் கேள்விகளை தெரிவித்தால் ஆசிரியர் குழுவால் அதற்கான பதில்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
[the_ad id=”6240″]