பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை தேசங்களிலிருந்து மதரீதியிலான துன்புறுத்தினால் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள்,கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டதே இந்த மசோதாவின் நோக்கம் ஆகும்.
அதாவது முஸ்லிம்களைத் தவிர மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளதாக உள்ளது.
குடியுரிமை தொடர்பான வேறு பிரச்சனைகள்
நிகழ்வு 1
ஏற்கனவே தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) பிரச்சினையானது வடகிழக்கு மாநிலங்களில் மிக அதிகமாக உள்ளது.
வங்கதேச விடுதலைப் போரின்போது பல லட்சக்கணக்கான வங்கதேச குடிமக்கள் இந்தியாவில் குடியேறினர்.
வங்கதேச விடுதலைப் போர் முடிந்து வங்கதேசம் என்று ஒரு நாடு உருவான பின்னரும் அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லாமலேயே இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் தொகையானது மிக அதிகமாக அதிகரித்தது.
அதுமட்டுமில்லாமல் அங்கு காலம் காலமாக வசித்து வந்த பழங்குடியினரின் எண்ணிக்கையை காட்டிலும் புதிதாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது.
இதன் காரணமாக அங்கு தொடர்ச்சியான போராட்டங்களும் கலவரங்களும் நடைபெற்ற வந்துகொண்டிருந்தன.
அரசியல் காரணங்களுக்காகவும் வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சிகள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக பல்வேறு தீவிரவாத குழுக்கள் வடகிழக்கு மாநிலங்களில் வேறுன்ற காரணமாக அமைந்தது.
இதை சரி செய்வதற்காக தேசிய குடியுரிமை பதிவு சமீபத்தில் அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்டது.
நிகழ்வு 2
வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினரின் மக்கள் தொகை அடர்த்தி பாதுகாக்கும் பொருட்டு குறிப்பிட்ட சில மாநிலங்களில் இன்னர் லைன் பர்மிட் (ILP ) என்ற முறையானது பின்பற்றப்படுகின்றது.
இந்திய அரசியல் அமைப்பானது பிரிவு 19ன் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் இந்தியாவில் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வருவதற்கான உரிமையை வழங்கி இருந்தாலும் கூட குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு செல்லும்போது அதற்கான விதிமுறைகள் வேறு விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இன்னர் லைன் பர்மிட் (ILP) உள்ள மாநிலங்கள்
1.அருணாச்சல் பிரதேசம்
2.நாகாலாந்து
3.மிசோரம்
அடுத்ததாக மணிப்பூர் மாநிலம் இந்த பட்டியலில் இணைக்கப்பட உள்ளது.
மக்கள் தொகை அடர்த்தி
ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் வாழும் மக்களின் எண்ணிக்கை மக்கள் தொகை அடர்த்தி என்று அழைக்கப்படுகின்றது.
இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தியைக் காட்டிலும் வங்கதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி மிகவும் அதிகமாகும். (உலகில் மிக அதிக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட நாடு வங்கதேசம் ஆகும்)
முரண்படும் சட்டப்பிரிவுகள்
சட்டப் பிரிவுகள் 14, 15, 21, 25 மற்றும் 26.
பின்னணி
முதன்முதலில் 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.
அந்தச் சட்டத்தின்படி அண்டை நாடான பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயரும் இந்துக்கள் ,சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர் ஆகியோர் 12 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வசித்தால் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
#குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019 தொடர்பான அனைத்து செய்திகளும் மசோதா சட்டமாக வெளிவரும்வரை இந்த பக்கத்தில் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.