உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் ரிப்பன் பிரபுவால் அறிமுகம் செய்யப்பட்ட கிராமப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அரசாங்கங்கள் பின்வரும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன.
உள்ளாட்சி அரசாங்கம் நன்றாக வரையறை செய்யப்பட்டுள்ள ஓர் அதிகார எல்லையைப் பெற்றுள்ளது. அது கிராமம் அல்லது மாவட்டம் போன்ற உறுதியானதோர் நிலைவரையைப் பெற்றுள்ளது. அதனுடைய குறிக்கோள், அந்த நிலப்பகுதிக்குள் அல்லது எல்லைக்குள் நிலவும் தனிப்பட்ட தன்மை வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதாகும்.
உள்ளாட்சி அரசாங்கம், அவ்வட்டாரத்திற்குள் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் ஆட்சி செய்யப்படுகின்றது. அவர்கள் வட்டாரத்து வாக்காளர்களுக்குப் பொறுப்பானவர்கள். மைய மாநில அரசாங்கங்களின் தேவையற்ற தலையீடின்றி வட்டாரத்து அலுவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிர்வாகம் செய்கின்றனர்.
வட்டார மக்களின் தேவைகளை மேம்படச் செய்வது உள்ளாட்சி அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும்.
உள்ளாட்சி அரசாங்கம் தனது நிதி நிலை அறிக்கையினை தயாரிப்பதிலும்,நிதி ஆதாரங்களைத் திரட்டுவதிலும் சுதந்திரம் பெற்றுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் என்றால் என்ன? எந்த ஆண்டு எந்த சட்ட திருத்தத்தில் அமைக்கப்பட்டது என்பதை எழுதவேண்டும்
BODY
1.உள்ளாட்சி அமைப்புகளின் வகைகள்(கிராம,நகர)….அதன் அமைப்புகள் .
2.முக்கிய பணிகளை விவரித்து கூறவேண்டும்.(பெண்கள் வளர்ச்சி,கல்வி வளர்ச்சி,பொது சுகாதாரம்……)
3.வருவாய் ஆதாரங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வரி விதிப்பு அதிகாரங்கள் பற்றி எழுதலாம்
CONCLUSION
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.