தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் மற்றும் அதிகாரங்களை விவரி /EXPLAIN ABOUT THE FUNCTIONS AND POWERS OF NATIONAL HUMAN RIGHTS COMMISSION

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

 

தேசிய மனித உரிமைகள் ஆணையம்

 

1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மனித உரிமைகள் சட்டத்தின்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்தியாவில் அக்டோபர் 12 , 1993 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாணையம் தலைவர் ஒருவரையும் ,நான்கு உறுப்பினர்களையும் கொண்டது.

இவ்வாணையத்தின் தலைவர் பொதுவாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.

[the_ad id=”5123″]

ஆணையத்தின் ஒரு உறுப்பினர் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும், மற்றொரு உறுப்பினர் மாநில உயர் மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும் மீதமுள்ள இரு உறுப்பினர்கள் மனித உரிமைகள் சார்ந்த செயல் அனுபவமிக்கவராக இருக்க வேண்டும். இவர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

அமைப்பு

 

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையிடம் புதுடில்லி ஆகும்.

குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரின் ஆணையின் பேரில் பணி நீக்கம் செய்யப்படலாம்.

ஆணையத்தின் தலைவர் 5 ஆண்டுகளோ அல்லது 70 வயது வரையிலோ இப்பதவியில் பணியாற்றலாம். மற்ற உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் பதவி வகிக்கலாம்.

[the_ad id=”5123″]

குடியரசுத் தலைவர் விரும்பினால் இவர்களை மீண்டும் 5 ஆண்கட்கு மறுநியமனம் செய்யலாம்.

 

ஆணையத்தின் பணிகள்

 

இதன் முக்கிய நோக்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் ,மேம்படுத்துவதும் ஆகும்.

மனித உரிமைகள் சம்பந்தமாக ஆய்வுகள் நடத்தி, அது சம்பந்தமான கல்வியறிவினை மக்களிடையே பரப்புவது,ஊடகங்கள் மூலமாகவும், கருத்தரங்கம் மூலமாகவும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

[the_ad id=”5123″]

மனித உரிமைகள் மீறப்படும் போது பாதிக்கப்பட்டவர்கள் மனு செய்தாலோ அல்லது ஆணையம் தானாகவே முன் வந்து பாதிக்கப்பட்டவர்களை விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கும்.

 

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கீழ்க்கண்டவற்றிற்கு முன்னுரிமை வழங்கி பணியாற்றுகிறது.

 

மக்களின் வாழ்வியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும்,
மனித உரிமைகளுக்கு எதிராக கொண்டுவரப்படும் சட்டத்தினை ஆய்வு செய்யவும்,
காவல் துறையினரின் வன்முறை மற்றும் கற்பழிப்பு போன்றவற்றை அகற்றுவது சம்பந்தமாகவும் ,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் குறைகளை களைவதற்கும்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னுரிமை வழங்குகிறது.

[the_ad id=”5123″]

NATIONAL HUMAN RIGHTS COMMISSION

 

NHRC was constituted under Section 3 of the 1993 Act for better protection of human rights.
• It is autonomous i.e. it has been created by an Act of Parliament.
• NHRC is committed to provide independent views on issues within the parlance of the Constitution or in law for the time being enforced for the protection of human rights. The Commission takes an independent stand.
• NHRC has the powers of a civil court.

 

Composition of NHRC

The act lays down the qualifications that the members are required to have, to be eligible to be appointed to the Commission.
Section 3 of the Act lays down that the Commission shall consist of:

A Chairperson
One Member who is, or has been, a Judge of the Supreme Court of India
One Member who is, or has been, the Chief Justice of a High Court
Two Members to be appointed from among persons having knowledge of, or practical experience in, matters relating to human rights
In addition, the Chairpersons of four National Commissions of ( 1.Minorities 2.SC 3.ST 4.Women) serve as ex officio members.

[the_ad id=”5123″]

Appointment and Removal

The Chairperson and the Members of the Commission are appointed by the President of India, on the recommendations of a Committee consisting of:

The Prime Minister (chairperson)
The Home Minister
The Leader of the Opposition in the Lok Sabha
The Leader of the Opposition in the Rajya Sabha
The Speaker of the Lok Sabha
The Deputy Chairman of the Rajya Sabha

[the_ad id=”5123″]

Functions and Powers of Commission

The Commission performs the following functions, namely:

Inquire, suo motu or on a petition presented to it by a victim or any person on his behalf, into complaint of

a) violation of human rights – this is extremely obvious
b) negligence in the prevention of such violation, by a public servant.
c) intervene in any proceeding involving any allegation of violation of human rights pending before a court with the approval of such court.
d) visit, under intimation to the State Government, any jail or any other institution under the control of the State Government, where persons are detained or lodged for purposes of treatment, reformation or protection to study the living conditions of the inmates and make recommendations.
e) review the safeguards provided by or under the Constitution or any law for the time being in force for the protection of human rights and recommend measures for their effective implementation.
f) review the factors, including acts of terrorism that inhibit the enjoyment of human rights and recommend appropriate remedial measures.
g) study treaties and other international instruments on human rights and make recommendations for their effective implementation.
h) undertake and promote research in the field of human rights.
i) spread human rights literacy among various sections of society and promote awareness of the safeguards available for the protection of these rights through publications, the media, seminars and other available means.
j) encourage the efforts of non-governmental organisations and institutions working in the field of human rights.

A State Commission may inquire into violation of human rights only in respect of matters in the State list and Concurrent list.

[the_ad id=”5123″][the_ad id=”2159″]

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்