REFERENCE |
TAMIL |
ENGLISH |
UPSCTAMIL.COM
in
5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி
ANSWER MODEL
INTRODUCTION
[the_ad id=”5123″]
மாநில வனக்கொள்கையின் நோக்கங்களில், இயற்கை வனப்பகுதிகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல், உயிரின் வாழ்க்கைச் சூழலின் அமைப்புமுறை, அதன் வேறுபட்ட மரபியல் பண்புகள் ஆகியவற்றைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை உறுதி செய்தல், வனங்களின் உற்பத்தித்திறனை அதிகரித்தல், வனப்பகுதிகளிலுள்ள நீர் ஆதாரங்களைப் பெருக்குதல், மாநிலம் முழுவதிலும் அடர்த்தியாக மரம் வளர்க்கும் பரப்பளவை அதிகரித்தல் மற்றும் தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படுகிற தாக்கத்தை தணித்தல் ஆகியவையும் அடங்கும்.
BODY
[the_ad id=”5123″]
1. தேசிய வனக் கொள்கையின் நோக்கங்கள் மற்றும் தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023′ ஆவணத்தில் தெரிவிக்கப்பட்ட தொலைநோக்கங்களை எய்துவதற்கும், இக்கொள்கை அவசியமாகிறது.
2. அடிப்படை நோக்கங்கள் —
-
பல்வகை உயிரின தாவரத்தொகுதி மற்றும் அவற்றின் மரபியல் வளத்தைப் பாதுகாத்தல்;
-
வளங்குறைந்த வனப்பகுதிகளுக்கு புத்துயிர் அளித்து சீரமைத்தல்;
-
கடலோரப்பகுதிகளின் உயிரின் வாழ்க்கைச் சூழலின் அமைப்பு முறையைப் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தல்;
-
வனத்தின் உள்ளேயும் மற்றும் வெளியேயும், மரம் வளர்ப்பதை அதிகரிப்பதன் வாயிலாக தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படுகிற தாக்கத்தைத் தணிப்பது மாற்றி அமைப்பது;
5. வனப்பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வரத்து மேலாண்மை வாயிலாக நீர் வளத்தைப் பெருக்குதல்;
[the_ad id=”5123″]
6. வனவிலங்கு மேலாண்மையைப் பாதுகாத்துப் பேணுவதற்கு, உள்ளூர் மக்களை, குறிப்பாக பழங்குடியினரை ஈடுபடச்செய்தல்;
7. அறிவியல் சார்ந்த வன மேலாண்மைக்கான ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு;
உள்ளூர் மக்களுக்கு, குறிப்பாக பழங்குடியினரின் வாழ்வாதாரத்திற்கு வகை செய்வதற்காக, உயிரின் வாழ்க்கைச் சூழல் செறிந்த பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்ளுதல்;8. வன மேலாண்மைக்கான மனித வளத்தை மேம்படுத்துதல். பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தல்
[the_ad id=”5123″]