இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்(Comptroller and Auditor General (CAG) of India) இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் (Chapter V) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும்.
BODY
அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இவர் செயல்படுகிறார்.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற/மாநிலச் சட்டப்பேரவைகளின் சிறப்புக் குழுக்களான பொது கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன.
நாடெங்கும் 58,000 ஊழியர்களைக் கொண்ட இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் தலைவராகவும் செயல்படுகிறார்.
அரசின் பட்ஜெட் பாராளுமன்றம் ஒப்புக்கொள்ளும் போது, அரசு வரி வருவாய் ஈட்டும் அதிகாரத்தை Finance Act என்ற சட்டமாக மாற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
அதேபோல செலவு செய்யும் அதிகாரத்தை Appropriation Act என்ற சட்டமாக மாற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
இந்த இரண்டு சட்டங்களும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு அரசுக்கு அனுப்பப்படும்.
இதில் ஒரு பிரதி சி.ஏ.ஜி.க்கும் அனுப்பப்படும். இந்த இரண்டு சட்டங்களிலும் இருப்பதுபோல வரி வசூலிக்கப்படுகிறதா, செலவு செய்யப்படுகிறதா என்ற அரசின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து ஓர் அறிக்கையை குடியரசு தலைவருக்கு சி.ஏ.ஜி. அனுப்பி வைக்கும்.
இவ்வாறு குடியரசு தலைவர் கொடுத்த அனுமதி சரியாக நடைமுறை படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை கண்காணிப்பதுதான் சி.ஏ.ஜி.யின் பணி.
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.